உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மின் கசிவுவால் தீ விபத்து வட மாநில வாலிபர் பலி

மின் கசிவுவால் தீ விபத்து வட மாநில வாலிபர் பலி

மறைமலை நகர்:உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர்கள் விபீன்,32. சர்வன்குமார் ,25.ச ுதீர்வர்ஷன், 27, மூவரும் சிங்கபெருமாள் கோவில் அடுத்த செட்டி புண்ணியம் பகுதியில் தங்கி கட்டுமான வேலை பார்த்து வந்தனர். வேலை செய்து வந்த இடத்திலேயே இரும்பு தகரத்தில் கூரை அமைத்து தங்கி வந்தனர்.கடந்த 6ம் தேதி அதிகாலை மூவரும் தங்கள் மொபைல் போன்களை சார்ஜ் போட்டு விட்டு தூங்கிக் கொண்டிருந்த போது மின் கசிவு ஏற்பட்டு அந்த அறையில் இருந்த பொருள்கள் தீப்பற்றி எரிய துவங்கியது.இதில் பலத்த காயம் அடைந்த மூவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு நேற்று காலை சர்வன்குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விபின் மற்றும் சுதீர்வர்ஷன் இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ