உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / ரெட்டிப்பாளையத்தில் ஆதார் சிறப்பு முகாம்

ரெட்டிப்பாளையத்தில் ஆதார் சிறப்பு முகாம்

செங்கல்பட்டு, செங்கல்பட்டு அஞ்சல் கோட்டம் சார்பில், மாவட்டம் முழுதும் சிறப்பு ஆதார் முகாமை தனியார் நிறுவனங்கள், பள்ளி, கல்லுாரிகளில் மற்றும் ஊராட்சிகளில் நடத்த, அஞ்சல் அலுவலர்களுக்கு, கோட்ட கண்காணிப்பாளர் சண்முகசாமி உத்தரவிட்டார்.இதைத்தொடர்ந்து ரெட்டிப்பாளையம் ஊராட்சியில் அஞ்சல் துறை சார்பில், சிறப்பு ஆதார் முகாம், நேற்று முன்தினம் நடந்தது.இதில், அஞ்சல் ஆய்வாளர் ராஜா பேசுகையில், ''ஆதார் முகாம்களை கிராமவாசிகள், தொழிலாளர்கள், கல்லுாரி மாணவர்கள் பயன்பெரும் வகையில் நடத்தி வருகிறோம். அஞ்சல் துறையில், சிறுசேமிப்பு கணக்குகள், சுகன்யா சம்ரிதி கணக்குகள், அஞ்சல் காப்பீடுகளை கிராமவாசிகள் துவங்கி பயன் பெறலாம்,'' என்றார்.இந்த முகாமில், 150க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி