உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / இளங்கிளி அம்மன் கோவிலில் ஆடிப்பூரம் விழா விமரிசை

இளங்கிளி அம்மன் கோவிலில் ஆடிப்பூரம் விழா விமரிசை

அச்சிறுபாக்கம், அச்சிறுபாக்கத்தில், புகழ்பெற்ற இளங்கிளி அம்மன் உடனுறை ஆட்சீஸ்வரர் திருக்கோவில் உள்ளது. இங்கு, ஆண்டுதோறும் ஆடிப்பூரம் விழாவில், அம்மனுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெறும். அவ்வகையில் நேற்று முன்தினம் காலை, மங்கள இசையுடன் விழா துவங்கியது. பின், மாலை ஆட்சீஸ்வர சுவாமிக்கும், அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தன. அதைத்தொடர்ந்து, கோவில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்வில் ஏராளமான பெண்கள் பங்கேற்று, இளங்கிளி அம்மனை வழிபட்டனர். இவ்விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு அன்னதானம், வளையல், தாலி கயிறு மற்றும் மஞ்சள், குங்குமம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ