உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கல்பாக்கம் கடற்கரையில் ஒதுங்கிய தெப்பம் மிதவை

கல்பாக்கம் கடற்கரையில் ஒதுங்கிய தெப்பம் மிதவை

புதுப்பட்டினம்:கல்பாக்கம் கடற்கரையில் ஒதுங்கிய தெப்பம் மிதவையால், சலசலப்பு ஏற்பட்டது.கல்பாக்கம், மத்திய தொழிலக பாதுகாப்பு படை முகாம் வளாக சுற்றுச்சுவரை ஒட்டியுள்ள கடற்கரையில், நேற்று அதிகாலை, ஆட்கள் இல்லாத தெப்பம் மிதவை கரை ஒதுங்கி இருந்தது.இதை காலையில் பார்த்த புதுப்பட்டினம் மீனவர்கள், டிராக்டரில் கட்டி இழுத்து கரைக்கு கொண்டு வந்தனர். அது, மூங்கில் கம்புகளை இணைத்து, மிதவையாக உருவாக்கப்பட்டு இருந்தது.அதன் ஒரு பகுதியில் அலங்கார வழிபாட்டுக்கூடம் அமைத்து, புத்தர் படத்துடன் பதாகையும் உள்ளது. பிளாஸ்டிக் கிண்ணம், காலிபாட்டில் உள்ளிட்ட பொருட்களும் இருந்தன.பல வண்ண கொடிகள் பறக்க விடப்பட்டுள்ளன. தகவலின்படி வந்த கல்பாக்கம் போலீசார் அதை பார்வையிட்டு, மீனவர்களிடம் விசாரித்தனர்.இதுகுறித்து, மீனவர்கள் கூறியதாவது:மியான்மர் நாட்டில், இதுபோன்ற தெப்பம் மிதவைகளில் வழிபாடு நடத்தப்படுவதாக தெரிகிறது. பல ஆண்டுகளுக்கு முன், இதேபோன்று தெம்பம் ஒதுங்கி உள்ளது. தற்போதும் அதுபோன்று ஒதுங்கியுள்ளது. 'பெஞ்சல்' புயலின் போது அலையில் அடித்து வந்து, இங்கு ஒதுங்கியிருக்கலாம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !