மேலும் செய்திகள்
அரசு போக்குவரத்து பணிமனையில் ஒய்வறை திறப்பு
20-Jan-2025
கல்பாக்கம்:அரசு போக்குவரத்துக்கழக, கல்பாக்கம் பணிமனையில், ஓட்டுனர், நடத்துனர் ஓய்வறைக்கு குளிர்சாதன வசதி ஏற்படுத்தப்பட்டது.அரசு போக்குவரத்துக் கழகம், விழுப்புரம் கோட்டத்தின்கீழ், 36 பேருந்துகளுடன் கல்பாக்கம் பணிமனை இயங்குகிறது. கல்பாக்கம் - தாம்பரம், சென்னை - புதுச்சேரி, தாம்பரம் - கும்பகோணம், தாம்பரம் - திருச்சி ஆகிய வழித்தடங்களில், பணிமனை பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஓட்டுனர்கள், நடத்துனர்கள் ஆகியோர் பணி முடிந்து திரும்பியதும், பணிமனையில் ஓய்வெடுக்க தனியறை வசதி உள்ளது. அதற்கு குளிர்சாதன வசதியில்லை. கோடையில், தகிக்கும் வெப்பத்தால் அவதிக்குள்ளாகின்றனர். அவர்கள் நலன் கருதி, ஓய்வறைக்கு குளிர்சாதன வசதி ஏற்படுத்த, நிர்வாகம் உத்தரவிட்டது.தற்போது குளிர்சாதன வசதி ஏற்படுத்தி, பயன்பாட்டிற்கு துவக்கியதாக, நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
20-Jan-2025