உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / திருக்கச்சூரில் எச்சரிக்கை பலகையை மறைத்து வைக்கப்பட்டுள்ள பேனரால் விபத்து அபாயம்

திருக்கச்சூரில் எச்சரிக்கை பலகையை மறைத்து வைக்கப்பட்டுள்ள பேனரால் விபத்து அபாயம்

மறைமலை நகர்:திருக்கச்சூரில் எச்சரிக்கை பலகையை மறைத்து வைக்கப்பட்டுள்ள விளம்பர பேனரால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.சிங்கபெருமாள் கோவில் -- ஸ்ரீபெரும்புதூர் மாநில நெடுஞ்சாலை 25 கி.மீ., துாரம் நீளம் உடையது. இந்த சாலையில், தினமும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் ஸ்ரீபெரும்புதுார், ஒரகடம் பகுதியில் உள்ள தொழிற்சாலைகளுக்கு சென்று வருகின்றன.மேலும், ஆப்பூர், தெள்ளிமேடு, திருக்கச்சூர் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சிங்கபெருமாள் கோவில், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று வர இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.இந்த சாலையில், திருக்கச்சூர் பகுதியில் மேம்பாலத்தின் துவக்கத்தில் அடிக்கடி விபத்துகள் நடைபெற்று வருகின்றன. இதையடுத்து, நெடுஞ்சாலைத் துறை சார்பில் விபத்து ஏற்படும் பகுதி என எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டு உள்ளது.இந்நிலையில், இந்த எச்சரிக்கை பலகையை மறைத்து தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் விளம்பர பலகைகள் வைக்கப்பட்டு உள்ளன.இதனால் புதிதாக வரும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே நெடுஞ்சாலையில் உள்ள விளம்பர பலகைகள் அட்டைகளை அகற்ற வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை