மேலும் செய்திகள்
ரயில்கள் ரத்து கூடுதலாக 50 பஸ் இயக்கம்
17-Nov-2024
சென்னை:மின்சார ரயில்கள் ஒரு பகுதி ரத்து செய்யப்படுவதால், சிங்கப்பெருமாள் கோயிலில் இருந்து செங்கல்பட்டுக்கு, 23ம் தேதி வரை, கூடுதல் பஸ்கள் இயக்கப்படும் என, மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. சிறப்பு பஸ்கள் இயக்கம் நேற்று துவங்கியது.மாநகர போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட அறிக்கை:சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில், சிங்கப்பெருமாள் கோயில் - செங்கல்பட்டு ரயில் நிலையங்கள் இடையே, பராமரிப்பு பணிகள் நேற்று துவங்கின; வரும் 23ம் தேதி வரை இந்த பணிகள் நடைபெறும். இதனால், மின்சார ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, மதியம் 1:10 மணி முதல் மாலை 4:10 மணி வரை, சென்னை கடற்கரை - செங்கல்பட்டு செல்லும் ரயில்கள், சிங்கப்பெருமாள் கோயில் வரை மட்டுமே இயக்கப்பட உள்ளது.எனவே, இந்த வழித்தடத்தில், பயணியரின் நலன் கருதி, தற்போது வழக்கமாக செல்லும் பேருந்துகளோடு, கூடுதலாக சிங்கப்பெருமாள் கோயிலில் இருந்து செங்கல்பட்டு பஸ் நிலையத்துக்கு, 10 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. பயணியரின் தேவைக்கேற்ப கூடுதல் பஸ்கள் இயக்கப்படும். சிங்கப்பெருமாள் கோயில் பஸ் நிறுத்தம் மற்றும் செங்கல்பட்டு பஸ் நிலையத்தில் அலுவலர்களை நியமித்து, பஸ் இயக்கத்தைக் கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
17-Nov-2024