அரசு கேபிள் சந்தா அதிகரிக்க அட்வைஸ்
செங்கல்பட்டு, பிப். 9-செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்ட, தமிழ்நாடு அரசு கேபிள் 'டிவி', மாவட்ட டிஜிட்டல் சிக்னல் வினியோகஸ்தர்கள் கள ஆய்வு கூட்டம், துணை கலெக்டர் மற்றும் துணை மேலாளர் அருள்பிரகாஷ் தலைமையில், செங்கல்பட்டு கலெக்டர் கூட்ட அரங்கில், நேற்று முன்தினம் நடந்தது. அரசு கேபிள் 'டிவி' தாசில்தார் மாதவன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.இந்த கூட்டத்தில், புதிய 'எச்.டி.,' மற்றும் 'எஸ்.டி., செட்டாப் பாக்ஸ்'களை உடனடியாக செயல்படுத்த வேண்டும். அரசு கேபிள் 'டிவி' சந்தாதாரர்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும்.கூடுதல் 'செட்டாப் பாக்ஸ்'கள் பெற்று, இணைப்புகளை அதிகரித்து நல்ல முன்னேற்றம் காண்பிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டன. வினியோகஸ்தர்களும், முழு ஒத்துழைப்பு அளிப்பதாக தெரிவித்தனர்.