சேறும், சகதியுமாக மாறிய சாலை அம்மணம்பாக்கம் வாசிகள் அவதி
சித்தாமூர்:சித்தாமூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட அம்மணம்பாக்கம் ஊராட்சியில், 400க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு, கடந்த 2007ம் ஆண்டு தார்ச்சாலை அமைக்கப்பட்டது.இந்த சாலை பராமரிப்பு இன்றி நாளடைவில் சேதமடைந்தது. இதனால், மழைக்காலத்தில் சாலையில் தண்ணீர் தேங்குவதாக, அப்பகுதியினர் குற்றஞ்சாட்டுகின்றனர்.குறிப்பாக, சுபாஷ் சந்திரபோஸ் தெரு, பிள்ளையார் கோவில் தெரு, பழைய பள்ளிக்கூட தெரு, மினி டேங்க் தெரு, பஸ் ஸ்டாப் தெருக்களில் மழைநீர் தேங்கி சேறும், சகதியுமாக மாறியுள்ளதால், சாலையில் நடந்து செல்வோர் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.