நந்திவரம் - கூடுவாஞ்சேரியில் கூடுதல் தபால் நிலையம் அவசியம்
கூடுவாஞ்சேரி, நந்திவரம் -- கூடுவாஞ்சேரி நகராட்சியில், கூடுதலாக இரண்டு அஞ்சல் அலுவலகம் அமைக்க வேண்டுமென, பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.செங்கல்பட்டு மாவட்டம், நந்திவரம் -- கூடுவாஞ்சேரி நகராட்சியில் உள்ள 30 வார்டுகளில், லட்சத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.புதிய வீடுகள், தனியார் குடியிருப்புகள் தொடர்ந்து அதிகரிப்பதால், ஆண்டுதோறும் மக்கள் தொகையும் அதிகரித்து வருகிறது.இங்கு, நகரின் மையப் பகுதியில் இயங்கி வந்த தபால் நிலையம், கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன், நகரின் கடைசி எல்லையாக உள்ள கே.கே.நகருக்கு மாற்றப்பட்டது.இதனால், ஓய்வூதியம் பெறும் முதியோர், செல்வ மகள் உள்ளிட்ட திட்டங்களில் பணம் செலுத்தும் மாதாந்திர சேமிப்பாளர்கள் உள்ளிட்டோர், 3 கி.மீ., துாரம் பயணித்து, தபால் நிலையம் செல்ல வேண்டி உள்ளது.எனவே, தபால் நிலையத்தை நகரின் மையப் பகுதிக்கு மாற்ற வேண்டும். தவிர, கூடுதலாக இரண்டு அஞ்சல் அலுவலகங்கள் அமைக்க வேண்டும் என, பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.