உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / டீ குடிக்க சைக்கிளில் சென்ற முதியவர் பஸ் மோதி பலி

டீ குடிக்க சைக்கிளில் சென்ற முதியவர் பஸ் மோதி பலி

சித்தாமூர்:சித்தாமூர் அடுத்த சரவம்பாக்கம் கிராமம், மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கண்ணன், 69. நேற்று காலை 5:30 மணிக்கு, டீ குடிப்பதற்காக, சித்தாமூர் பஜார் பகுதிக்கு, தன் சைக்கிளில் சென்றார்.அப்போது, செய்யூரில் இருந்து ஒரகடம் நோக்கி சென்ற தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான பேருந்து, சரவம்பாக்கம் சாலை சந்திப்பில், எதிரே வந்த கண்ணனின் சைக்கிள் மீது மோதியது.இதில், தலையில் பலத்த காயமடைந்த கண்ணன், சம்பவ இடத்திலேயே பலியானார்.இதுகுறித்து, சம்பவ இடத்திற்கு சென்ற சித்தாமூர் போலீசார், உடலைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக, மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.பின், வழக்குப் பதிவு செய்து, விபத்து ஏற்படுத்திய தனியார் நிறுவன பேருந்து ஓட்டுனர் தனசேகரனை கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை