உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / வெடால் ஊராட்சிக்கு ரூ.8 லட்சத்தில் அங்கன்வாடி கட்டடம்

வெடால் ஊராட்சிக்கு ரூ.8 லட்சத்தில் அங்கன்வாடி கட்டடம்

செய்யூர், வெடால் ஊராட்சியில், 8 லட்சம் ரூபாய் மதிப்பில், புதிய அங்கன்வாடி மைய கட்டடம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.செய்யூர் அருகே வெடால் ஊராட்சியில், 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.வெடால் கிராமத்தில், அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இதில் 15 குழந்தைகள் படிக்கின்றனர்.மேலும், கர்ப்பிணியர் மற்றும் பாலுாட்டும் தாய்மார்கள் என, 20க்கும் மேற்பட்டோர் இணை உணவு மற்றும் ஊட்டச்சத்து பரிசோதனையால் பயனடைந்து வருகின்றனர்.இங்கிருந்த பழைய அங்கன்வாடி மைய கட்டடம், 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டதால், நாளடைவில் பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் இருந்தது.இதனால் தற்போது, மாற்று கட்டடத்தில் அங்கன்வாடி மையம் செயல்படுகிறது.புதிய அங்கன்வாடி மைய கட்டடம் அமைக்க வேண்டும் என, குழந்தைகளின் பெற்றோர் வேண்டுகோள் விடுத்து வந்தனர்.இந்நிலையில், ஊரக வளர்ச்சித் துறை சார்பாக, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ், 8 லட்சம் ரூபாய் மதிப்பில், அரசு நடுநிலைப்பள்ளி வளாகத்தில் புதிய அங்கன்வாடி மைய கட்டடம் அமைக்க முடிவு செய்யப்பட்டு, டெண்டர் விடப்பட்டது.இதையடுத்து, கட்டுமானப் பணிகள் துவங்கப்பட்டு நடந்து வருகின்றன.விரைவில் புதிய அங்கன்வாடி மைய கட்டடம் கட்டப்பட்டு, பயன்பாட்டிற்கு வரும் என, ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ