உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / செங்கை, காஞ்சி அறநிலைய உதவி கமிஷனர்கள் நியமனம்

செங்கை, காஞ்சி அறநிலைய உதவி கமிஷனர்கள் நியமனம்

மாமல்லபுரம்:ஹிந்து சமய அறநிலையத் துறையின் காஞ்சிபுரம் மண்டலத்தில், செங்கல்பட்டு உதவி கமிஷனராக லட்சுமிகாந்த பாரதிதாசன் பணிபுரிந்தார்.காஞ்சிபுரம் உதவி கமிஷனர் பணியிடம் காலியாக இருந்ததால், அங்கும் முழு கூடுதல் பொறுப்பை, அவரே வகித்தார். அவர், கடந்த ஜூன் 30ம் தேதி பணியிலிருந்து ஓய்வுபெற்றார்.இதையடுத்து, சென்னை, வடபழனி ஆண்டவர் கோவில் துணை கமிஷனர் ஹரிஹரன், கூடுதல் பொறுப்பில் செங்கல்பட்டு உதவி கமிஷனராக பணியாற்றுகிறார்.வேலுார் துணை கமிஷனர் மற்றும் சரிபார்ப்பு அலுவலர் கருணாநிதி, முழு கூடுதல் பொறுப்பில், காஞ்சிபுரம் உதவி கமிஷனராக பணியாற்றுகிறார்.இந்நிலையில், அறநிலைத்துறை கமிஷனர் அலுவலக கண்காணிப்பாளர் ராஜலட்சுமியை, செங்கல்பட்டு உதவி கமிஷனராகவும், திருவள்ளூர் மாவட்டம், சிறுவாபுரி, பாலசுப்பிரமணியசுவாமி கோவில், நிலை - 1 செயல் அலுவலர் கார்த்திகேயனை, காஞ்சிபுரம் உதவி கமிஷனராகவும் நியமித்து, அத்துறை முதன்மை செயலர் சந்திரமோகன் உத்தரவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை