வருவாய் கோட்டாட்சியர்கள் நியமனம்
செங்கல்பட்டு, செங்கல்பட்டு, தாம்பரம் வருவாய் கோட்டங்களுக்கு, கோட்டாட்சியர்களை நியமித்து, கலெக்டர் அருண்ராஜ் நேற்று உத்தரவிட்டார்.செங்கல்பட்டு சப்- கலெக்டர் அலுவலகம், தாம்பரம் வருவாய் கோட்டாட்சியர் ஆகிய பணியிடங்களில், சப் - கலெக்டர் நாராயணசர்மா பணிபுரிந்து வந்தார். அவருக்கு, பதவி உயர்வு வழங்கி அரசு உத்தரவிட்டது.அதன் பின், நிர்வாக நலன் கருதி, சப்- கலெக்டர் பணியமைப்பில் முழு கூடுதல் பொறுப்பு வகிக்க, செங்கல்பட்டு, தாம்பரம் வருவாய் கோட்டாட்டங்களில், கோட்டாட்சியர்களை நியமித்து, கலெக்டர் அருண்ராஜ், நேற்று உத்தரவிட்டார்.பெயர் தற்போதைய பதவி கூடுதல் பொறுப்பு பணியிடம்க.சாகிதா பர்வின் மாவட்ட வழங்கல், நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர், செங்கல்பட்டு வருவாய் கோட்டாட்சியர், செங்கல்பட்டு.கோ.அர.நரேந்திரன் கலெக்டர் நேர்முக உதவியாளர் , செங்கல்பட்டு வருவாய் கோட்டாட்சியர், தாம்பரம்.