மேலும் செய்திகள்
மின்சாரம் பாய்ந்து முதியவர் பலி
03-Sep-2024
வாகனம் மோதி முதியவர் பலி
06-Sep-2024
மாமல்லபுரம்:சென்னை, மயிலாப்பூரைச் சேர்ந்த அப்துல்சமது மகன் சையது முகமது, 17. பெரம்பூர், ஜமாலியா மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளி, பிளஸ் 2 மாணவர்.மாமல்லபுரம் அடுத்த கூத்தவாக்கம் பகுதியில் இயங்கும் அரபிக் கல்லுாரி விடுதியில் தங்கியிருந்த அவர், நேற்று காலை 9:15 மணிக்கு, அப்பகுதிவிவசாய கிணற்றில், உடன் தங்கியிருந்த மூன்று பேருடன் குளித்தார்.அப்போது, நீச்சல் தெரியாத சையது முகமது நீரில் மூழ்கினார். மாமல்லபுரம் தீயணைப்பு வீரர்கள், கிணற்றில் தேடி, உடலை மீட்டனர். அவரின் தந்தை அப்துல் சமது அளித்த புகாரின்படி, மாமல்ல புரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
03-Sep-2024
06-Sep-2024