உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / அரசூர் முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் விமரிசை

அரசூர் முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் விமரிசை

சூணாம்பேடு:சூணாம்பேடு அடுத்த அரசூர் கிராமத்தில், முத்துமாரியம்மன் திருக்கோவில் உள்ளது.கோவிலை புனரமைத்து, கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்த கிராமத்தினர், கடந்த மூன்று ஆண்டுகளாக திருப்பணி மேற்கொண்டனர்.திருப்பணிகள் முடிந்ததை அடுத்து, கும்பாபிஷேகத்திற்கான யாகசாலை பூஜைகள், கடந்த 14ம் தேதி துவங்கின.தொடர்ந்து கணபதி பூஜை, விக்னேஸ்வர பூஜை, நவக்கிரக பூஜை, கோ பூஜை நடந்ததை அடுத்து,நேற்று காலை 10:10 மணிக்கு முத்துமாரியம்மன் கோவில் கோபுர விமானத்திற்கும், 10:20 மணிக்கு மூலவருக்கும் கும்பாபிஷேகம் நடந்தது.பின், முத்துமாரியம்மனுக்கு வண்ண மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது.அரசூர் மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களில் வசிக்கும் ஏராளமான பக்தர்கள் திரளாக வந்து, சுவாமியை வழிபட்டுச் சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ