மேலும் செய்திகள்
சிவகங்கை நகை கடையில் திருட்டு
25-Sep-2024
கூடுவாஞ்சேரி:காட்டாங்கொளத்துார் ஒன்றியம், மண்ணிவாக்கம் ஊராட்சி அம்பேத்கர் தெருவில் வசித்து வருபவர் கண்ணன், 39. இவர், அப்பகுதியில் பால் வியாபாரம் செய்து வருகிறார்.அவரது வீட்டின் அருகில் உள்ள காலி மனை இடம் தொடர்பாக, கண்ணனுக்கும், அவரது பெரியப்பா பரமசிவத்திற்கும் இடையே பிரச்னை இருந்து வந்துள்ளது.இந்நிலையில், நேற்று இந்த இடத்திற்கு பரமசிவம் உரிமை கொண்டாடி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அதனை தொடர்ந்து ஏற்பட்ட பிரச்னையில், பரமசிவம், அவரின் மகன் ராஜா, 36, இருவரும் இணைந்து, கல்லால் கண்ணனை தாக்கியுள்ளனர்.அதில், தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, கண்ணன் மயங்கி விழுந்துள்ளார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.பின், கண்ணன் கொடுத்த புகாரின் அடிப்படையில், ஓட்டேரி போலீசார் ராஜாவை கைது செய்து விசாரிக்கின்றனர்.
25-Sep-2024