உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கூடுவாஞ்சேரியில் வெடிகுண்டு வீசி இளநீர் வியாபாரியை கொல்ல முயற்சி

கூடுவாஞ்சேரியில் வெடிகுண்டு வீசி இளநீர் வியாபாரியை கொல்ல முயற்சி

கூடுவாஞ்சேரி:கூடுவாஞ்சேரியில், நாட்டு வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் இளநீர் வியாபாரி மீது கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்டது, அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கூடுவாஞ்சேரி, பஜனை கோவில் தெருவைச் சேர்ந்தவர் வெங்கடேசன், 34. இவர், அதே பகுதியில், ஜி.எஸ்.டி., சாலையோரம் கடை வைத்து இளநீர் வியாபாரம் செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு வியாபாரத்தை முடித்து, தன் வீட்டின் முன் வெங்கடேசன் அமர்ந்திருந்தார். அப்போது, இரவு 10:45 மணியளவில், இரண்டு பைக்குகளில் வந்த மர்ம நபர்கள் நான்கு பேர், வெங்கடேசன் மீது நாட்டு வெடிகுண்டுகளை மூன்று முறை வீசியுள்ளனர். அப்போது, வெங்கடேசனின் தம்பி சாமுவேல் துரிதமாக செயல்பட்டு, அவரை வீட்டிற்குள் அழைத்துச் சென்று கதவை பூட்ட முயற்சித்தார். உடனே, மர்ம நபர்கள் வீட்டின் கதவை தள்ளி, அரிவாளால் வெங்கடேசனை வெட்டிவிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றனர். கை மற்றும் கால்களில் வெட்டு பட்டு உயிருக்குப் போராடிய வெங்கடேசனை, அங்கிருந்தோர் மீட்டு, எஸ்.ஆர்.எம்., மருத்துவமனையில் சேர்த்தனர். தகவல் அறிந்து வந்த கூடுவாஞ்சேரி போலீசார், சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து, தப்பி ஓடிய மர்ம நபர்கள் நால்வரையும் பிடித்து, ரகசியமாக விசாரிப்பதாக கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி