உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / வாலிபரை கொன்று வீட்டில் புதைத்த வழக்கு ஆட்டோ ஓட்டுனருக்கு ஆயுள் தண்டனை

வாலிபரை கொன்று வீட்டில் புதைத்த வழக்கு ஆட்டோ ஓட்டுனருக்கு ஆயுள் தண்டனை

பூந்தமல்லி, ஆவடி, கவுரிபேட்டையைச் சேர்ந்தவர் அமுதா, 34. இவரது கணவர் இறந்துவிட்டார். அதே பகுதியைச் சேர்ந்த சுந்தரம், 36, என்பவருடன் அமுதாவிற்கு பழக்கம் ஏற்பட்டு, கள்ளக்காதலாக மாறியது.இந்நிலையில் அமுதாவிற்கு, அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் திவான் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இதனால், சுந்தரத்துடன் பழகுவதை அமுதா நிறுத்தியுள்ளார்.இதனால், சுந்தரத்திற்கும், அமுதாவிற்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சுந்தரம் இருந்தால், தங்களால் நிம்மதியாக வாழ முடியாது என கருதி, அவரை தீர்த்துக்கட்ட, திவானும், அமுதாவும் முடிவு செய்தனர்.கடந்த 2017, செப்., 7ம் தேதி, சுந்தரத்தை தன் வீட்டிற்கு அழைத்து வந்த திவான், தன் நண்பர் கோபிநாத்துடன் சேர்ந்து, கத்தியால் குத்தி கொலை செய்தனர். வீட்டிலேயே பள்ளம் தோண்டி, சுந்தரம் உடலை புதைத்து, தரையை பூசி விட்டனர். ஆவடி போலீசார் வழக்கு பதிந்து, திவான், கோபிநாத், அமுதா மற்றும் ராஜேஸ்வரி ஆகிய நான்கு பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.இந்த வழக்கு, பூந்தமல்லியில் உள்ள இரண்டாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி விஜயகுமார், இவ்வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கினார்.கொலை குற்றம் நிரூபிக்கப்பட்டதால், திவானுக்கு ஆயுள் தண்டனை; 1,000 ரூபாய் அபராதம், அபராதம் கட்ட தவறினால் மேலும் மூன்று மாதம் சிறை தண்டனையும் விதித்து, தீர்ப்பு வழங்கினார்.இவ்வழக்கில், கோபிநாத், ராஜேஸ்வரி, அமுதா ஆகியோருக்கு முகாந்திரம் இல்லை என கூறி, மூன்று பேரும் விடுவிக்கப்பட்டனர். இவ்வழக்கில், அரசு தரப்பில் வழக்கறிஞர் புரட்சிதாசன் வாதாடினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை