உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / குறுக்கே வந்த காட்டுப்பன்றி கம்பத்தில் மோதியது ஆட்டோ

குறுக்கே வந்த காட்டுப்பன்றி கம்பத்தில் மோதியது ஆட்டோ

சித்தாமூர்:திருக்கழுக்குன்றம் அடுத்த அம்மணம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் துரைராஜ், 29. இவர், அதே பகுதியில் செயல்படும் தனியார் 'ஐஸ்' கம்பெனியில் லோடு ஆட்டோ டிரைவராக பணிபுரிந்து வருகிறார்.நேற்று முன்தினம் இரவு லோடு ஆட்டோவில், சூனாம்பேடு பகுதியில் உள்ள கடைகளுக்கு, ஐஸ் வினியோகம் செய்து விட்டு கம்பெனிக்கு திரும்பி உள்ளார்.சித்தாமூர் அடுத்த கொல்லத்தநல்லுார் கிராமத்தில் சென்ற போது, இரவு 11:45 மணியளவில், திடீரென காட்டுப்பன்றி சாலையின் குறுக்கே வந்துள்ளது. அதன் மீது மோதாமல் இருக்க 'பிரேக்' பிடித்த போது கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ, சாலையோர மின்கம்பத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.விபத்தின் போது மின்கம்பிகள் ஒன்றுடன் ஒன்று உரசியதால், மின்மாற்றியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு, உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது.இதுகுறித்து, சித்தாமூர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ