உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பலே திருடர்கள் சிக்கினர் 12 பைக் பறிமுதல்

பலே திருடர்கள் சிக்கினர் 12 பைக் பறிமுதல்

தாம்பரம்:தாம்பரம் அருகே வண்டலுார் பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ், 24. கடந்த 9ம் தேதி இவரது 'பைக்'கை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இதுகுறித்த புகாரின்படி, தாம்பரம் போலீசார் விசாரித்தனர்.அதில், பைக்கை திருடியது கடலுாரைச் சேர்ந்த அய்யனார், 29, திண்டிவனத்தைச் சேர்ந்த விஜய், 20, என்பதும், இவர்கள் இருவர் மீது ஏழுக்கும் மேற்பட்ட பைக் திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரிய வந்தது.திண்டிவனத்தில் பதுங்கி இருந்த இருவரையும், தாம்பரம் தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 'பல்சர், ஹீரோ, ஹோண்டா' உள்ளிட்ட 12 பைக்குகளை போலீசார் பறிமுதல் செய்து, இருவரையும் சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ