உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / தாலுகா அலுவலக வளாகத்தில் அடிப்படை வசதிகள் படுமோசம்

தாலுகா அலுவலக வளாகத்தில் அடிப்படை வசதிகள் படுமோசம்

திருப்போரூர், திருப்போரூர் தாலுகா அலுவலக வளாகத்தில், குடிநீர் உள்ளிட்ட போதிய அடிப்படை வசதிகள் இல்லாததால், தாலுகா அலுவலகம் வருவோர் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.திருப்போரூர் தாலுகா அலுவலகத்தில், வட்ட வழங்கல் பிரிவு, நில அளவைப்பிரிவு, இ -- சேவை மையம், ஆதார் மையம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன.தினமும் பட்டா மாற்றம் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக, நுாற்றுக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். அதிலும், ஆதார் மற்றும் இ -- சேவை மையங்களுக்கு, பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் பெருமளவில் வருகின்றனர்.இங்கு போதிய அளவிலான குடிநீர் வசதி ஏற்படுத்தவில்லை. அதேபோல், நுாற்றுக்கணக்கான பெண்கள் வரும் நிலையில், பொது கழிப்பறை பராமரிப்பில்லாததால் பயன்படுத்த முடியாமல் உள்ளது. மேலும், போதிய இருக்கை வசதிகள் இல்லாமலும் உள்ளதால் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே, தாலுகா அலுவலகத்தில் குடிநீர், இருக்கை, கழிப்பறை வசதிகளை ஏற்படுத்தி, பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி