உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு /  பாரதியார் பிறந்த நாள் விழா

 பாரதியார் பிறந்த நாள் விழா

திருப்போரூர்: திருப்போரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கத்தின் திருப்போரூர் கிளை சார்பில் பாரதியார் பிறந்த நாள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. கிளை தலைவர் தாசன் தலைமை வகித்தார். செயலர் ரமேஷ் வரவேற்றார். விழாவில், பாரதியார் பாடல்களை மாணவ - மாணவியர் பாடினர். பாரதியார் கவிதைகளின் நடை, தேசபக்தி, தெய்வ பக்தி, வீரம் குறித்து பேசி பார்வையாளர்களை மெய்சிலர்க்க வைத்தனர். தொடர்ந்து, மாணவ - மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இவ்விழாவில், தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், கவிஞர்கள் உட்பட 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை