உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / திருக்கச்சூர் கச்சபேஸ்வரர் கோவில் கோபுரம் கட்ட பூமி பூஜை

திருக்கச்சூர் கச்சபேஸ்வரர் கோவில் கோபுரம் கட்ட பூமி பூஜை

மறைமலை நகர்:சிங்கபெருமாள் கோவில் அடுத்த திருக்கச்சூர் கிராமத்தில் பழமையான அஞ்சனாட்சி, உடனுறை கச்சபேஸ்வரர் கோவில் உள்ளது.இங்கு வினாயகர், முருகன், வள்ளி, தெய்வானை, சுந்தரர், விருந்திட்ட ஈஸ்வரர் உள்ளிட்டோருக்கு தனித்தனி சன்னிதிகள் உள்ளன.கோவில்,ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.ஆண்டு தோறும் சித்திரை மாதம் 11 நாட்கள் பிரம்மோற்சவம் விமரிசையாக நடைபெறும். இக்கோவில் நுழைவு வாயில் பகுதியில் பல ஆண்டுகளாக ராஜகோபுரம் இல்லாமல் இருந்து வந்தது. கோவிலுக்கு ராஜ கோபுரம் அமைக்க வேண்டும் என பக்தர்கள் அரசுக்கு பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர்.இந்நிலையில் கோவில் நிர்வாகம் உபயதாரர்கள் நிதியில் 2 கோடி ரூபாய் மதிப்பில் ராஜ கோபுரம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து,நேற்று காலை ஏழு படிநிலைகள் கொண்ட ராஜகோபுரம் அமைப்பதற்க்கான பூமி பூஜை நிகழ்ச்சி நடந்தது. இதில் செங்கல்பட்டு தி.மு.க., - எம்.எல்.ஏ., வரலட்சுமி, ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் கிராம மக்கள் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை