உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி சூணாம்பேடில் பூமி பூஜை

மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி சூணாம்பேடில் பூமி பூஜை

சித்தாமூர்: சூணாம்பேடு ஊராட்சியில் 36 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்ட, நேற்று பூமி பூஜை நடந்தது. சித்தாமூர் அடுத்த சூணாம்பேடு ஊராட்சியில் 3,000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். ஊராட்சிக்கு உட்பட்ட சூணாம்பேடு காலனி பகுதியில் நியாய விலைக்கடை அருகே, 40 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டி உள்ளது. இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பராமரிப்பின்றி சேதமடைந்து, இடிந்து விழும் நிலையில் உள்ளது. எனவே, புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க வேண்டும் என, கிராம மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வந்தனர். இந்நிலையில், ஊரக வளர்ச்சித்துறை சார்பாக 36 லட்சம் ரூபாயில், ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய நீர்த்தேக்க தொட்டி கட்ட நிதி ஒதுக்கப்பட்டு, தொட்டி கட்டுவதற்கான பூமி பூஜை, நேற்று காலை 10:30 மணிக்கு நடந்தது. இதில், செங்கல்பட்டு கலெக்டர் சினேகா பங்கேற்று, அடிக்கல் நாட்டினார். பின், சூணாம்பேடு பஜார் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் புதிதாக கட்டப்பட்டுள்ள வகுப்பறைகள் மற்றும் சமையல்கூடத்தை ஆய்வு செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி