உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / ரூ.48.52 லட்சம் பணிகளுக்கு பூமி பூஜை

ரூ.48.52 லட்சம் பணிகளுக்கு பூமி பூஜை

திருப்போரூர்:திருப்போரூர் அடுத்த கேளம்பாக்கம் ஊராட்சியில், அனைத்து கிராம அண்ணா மறு மலர்ச்சி திட்டத்தின் கீழ், ரெயின்போ காலனியில் 21.12 லட்சம் ரூபாய் மதிப்பில்,'பேவர் பிளாக்' சாலை, 9.85 லட்சம் ரூபாய் மதிப்பில் நியாய விலைக் கடை கட்டடம், சாத்தங்குப்பத்தில் 17.25 லட்சம் ரூபாய் மதிப்பில் அங்கன்வாடி கட்டடம் கட்ட, மொத்தம் 48.52 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.இதற்கான பணிகள் துவங்க, பூமி பூஜை விழா நடந்தது.இதில், ஊராட்சி தலைவர் ராணி தலைமை வகித்தார். திருப்போரூர் ஒன்றிய குழு தலைவர் இதயவர்மன் பூமி பூஜை செய்து, பணிகளை துவக்கி வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை