உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மதுராந்தகத்தில் பா.ஜ., பேரணி

மதுராந்தகத்தில் பா.ஜ., பேரணி

மதுராந்தகம்,:பாகிஸ்தானுக்கு எதிரான போரில் சிறப்பாக செயல்பட்ட இந்திய ராணுவத்தை பாராட்டி, மதுராந்தகத்தில் தேசியக்கொடி ஏந்தி பா.ஜ., சார்பில் வெற்றி பேரணி, நேற்று நடந்தது.செங்கல்பட்டு தெற்கு மாவட்ட தலைவர் பிரவீன் குமார் தலைமை வகித்தார்.பேரணியில், காஷ்மீர் பஹல்காம் பகுதியில் அப்பாவி பொதுமக்கள் மீது மதத்தின் பெயரால் பயங்கரவாதிகள் நடத்திய கோழைத்தனமான தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக நடந்த,'ஆப்ரேஷன் சிந்துார்' நடவடிக்கையை முன்னெடுத்த மத்திய அரசுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. மதுராந்தகம் தேரடி தெருவில் துவங்கி பஜார் வீதி, மருத்துவமனை சாலை வழியாக பேரணி நடந்தது.இதில், பா.ஜ., முன்னாள் மாவட்ட தலைவர்கள், மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர் மற்றும் கிளைக் கழக நிர்வாகிகள் நுாற்றுக்கணக்கானோர், தேசியக்கொடியை கையில் ஏந்தி பேரணியில் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை