உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / அப்துல் கலாம் பிறந்த தினம் ஆலப்பாக்கத்தில் ரத்த தானம்

அப்துல் கலாம் பிறந்த தினம் ஆலப்பாக்கத்தில் ரத்த தானம்

செங்கல்பட்டு:செங்கல்பட்டு அடுத்த ஆலப்பாக்கம் ஊராட்சி, மலையடிவேண்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள், முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் பிறந்த நாளையொட்டி, ஆண்டுதோறும் ரத்த தானம் செய்து வருகின்றனர்.இந்த ஆண்டு, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பிறந்த தினத்தையொட்டி, ஆலப்பாக்கம் ஊராட்சி தொடக்கப்பள்ளி வளாகத்தில், ரத்த தான முகாமை, வனக்குழு தலைவர் திருமலை, நேற்று துவக்கி வைத்தார்.செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை ரத்த வங்கியிலிருந்து, டாக்டர் குழுவினர் வந்தனர். அதன்பின், நுாறுக்கும் மேற்பட்டோர் ரத்ததானம் வழங்கினர்.இதில், மாமல்லபுரம் பேரூராட்சி தி.மு.க., கவுன்சிலர் மோகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். மேலும், மலையடிவேண்பாக்த்தைச் சேர்ந்த தமிழ்செல்வன் என்பவர், 48 முறை ரத்ததானம் செய்துள்ளார் என, மருத்துவக் குழுவினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை