உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / ஆற்றில் மாயமானவர் உடல் ஒரு வாரத்திற்கு பின் மீட்பு

ஆற்றில் மாயமானவர் உடல் ஒரு வாரத்திற்கு பின் மீட்பு

சென்னை: கொசஸ்தலை ஆற்றில், 500 ரூபாய் பந்தயத்திற்காக நீச்சலடிக்கும்போது, வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டவர் உடல், ஒரு வாரத்திற்கு பின் மீட்கப்பட்டது. சென்னை மாதவரம், பர்மா காலனியைச் சேர்ந்த ராஜா, 52, எருக்கஞ்சேரியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி, 45, உள்ளிட்ட ஐந்து பேர், நாப்பாளையம் தனியார் கிடங்கில் கூலி வேலை செய்து வந்தனர். கடந்த 25ம் தேதி, மணலிபுதுநகர் - கொசஸ்தலை ஆற்றங்கரைக்கு சென்ற ஐந்து பேரும், மது அருந்தியுள்ளனர். பின், ஆர்ப்பரிக்கும் ஆற்று வெள்ளத்தில் நீந்தி மறு கரைக்கு சென்று வருவோருக்கு, 500 ரூபாய் தருவதாக பந்தயம் கட்டியுள்ளனர். பந்தய பணத்திற்கு ஆசைப்பட்டு, ராஜா மற்றும் கிருஷ்ணமூர்த்தி ஆகிய இருவரும், கொசஸ்தலை காட்டாற்று வெள்ளத்தில் நீந்த முயன்றனர். அப்போது, வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு மாயமாகினர். தகவலறிந்த மணலி தீயணைப்பு நிலைய வீரர்கள், இரு தினங்கள் கழித்து, மணலிபுதுநகர் - வடிவுடையம்மன் நகர் ஆற்று பகுதியில் கிருஷ்ணமூர்த்தி உடல் சடலமாக மீட்கப்பட்டது. மாயமான ராஜாவை தேடி வந்த நிலையில், சடையங்குப்பம் பகுதி ஆற்றில், ஒரு வாரத்திற்குபின் நேற்று அவரது உடல் அழுகிய நிலையில் மிதந்துள்ளது. தகவலறிந்த சாத்தாங்காடு போலீசார், ராஜாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி