உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பள்ளி மாணவர்களுக்கு நுாலகம் சார்ந்த போட்டி

பள்ளி மாணவர்களுக்கு நுாலகம் சார்ந்த போட்டி

திருப்போரூர்:திருப்போரூரில், டாக்டர் அப்துல் கலாம் நடமாடும் நுாலகம் சார்பில், நுாலகம் புத்தகம் படிப்பு சார்ந்த போட்டிகள், வரும் 22ம் தேதி நடத்தப்படுகின்றன.இதில், திருப்போரூர் வட்டத்தைச் சேர்ந்த அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சார்ந்த ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள மாணவ, மாணவியர் பங்கேற்கலாம்.திருப்போரூரில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், இப்போட்டி நடைபெறுகிறது.மதியம் 1:00 மணி வரை போட்டிக்கு முன்பதிவும், மதியம் 1:30 முதல் மாலை 3:00 மணி வரை போட்டியும் நடைபெறும்.மாலை 3:00 மணிக்கு மேல் பரிசளிப்பு மற்றும் பாராட்டு விழா நடைபெறும் எனவும் கூறப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை