மேலும் செய்திகள்
5 வயது சிறுவனை கடித்த தெரு நாயால் அச்சம்
28-Sep-2025
திருப்போரூர், ஆலத்துாரில், சிறுவன் உட்பட ஐவருடன் சென்ற கார், முன்னால் சென்ற கார் மீது மோதியதில், சிறுவன் பலியானான். திருப்போரூர் அடுத்த பையனுார் கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ், 48. இவர் நேற்று முன்தினம் மாலை 6:00 மணியளவில், 'மாருதி சுசுகி பிரிஸ்சா' காரில், பையனுாரிலிருந்து திருப்போரூர் நோக்கிச் சென்றார். அதே திசையில், கல்பாக்கம் அடுத்த வசுவசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ், 26, என்பவர், வாடகை காரை ஓட்டிச் சென்றார். இந்த காரில், சிறுவன் உட்பட ஐந்து பேர் பயணித்தனர். அப்போது, ஆலத்துார் பெட்ரோல் பங்க் அருகே, சுரேஷ் ஓட்டிச் சென்ற கார் வலதுபுறம் திரும்பியுள்ளது. பின்னால் வந்த விக்னேஷ் இதை எதிர்பாராததால், அந்த கார் மீது மோதியுள்ளார். இதில், விக்னேஷ் காரின் முன்பக்கம் அமர்ந்திருந்த புதுப்பட்டினத்தைச் சேர்ந்த வீரமுத்து என்பவரது மகன் கவின், 6, முகத்தின் மீது, 'ஏர்பேக்' வேகமாக திறந்து அடித்து, காயம் ஏற்பட்டது. உடனே, அவசர கால 108 ஆம்புலன்ஸ் மூலமாக, சிறுவனை திருப்போரூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், ஏற்கனவே சிறுவன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். தகவலின்படி சம்பவ இடத்திற்கு வந்த திருப்போரூர் போலீசார், சிறுவனின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.
28-Sep-2025