மேலும் செய்திகள்
தஞ்சாவூர் இளைஞர் சாலை விபத்தில் பலி
23-Jun-2025
மறைமலை நகர்:சிங்கபெருமாள் கோவில் அருகே, ஸ்கூட்டரில் வேன் மோதி கொத்தனார் பலியானார்.செங்கல்பட்டு அடுத்த பொன்விளைந்தகளத்துார் பகுதியைச் சேர்ந்தவர் அன்பு, 55. மறைமலை நகர் அடுத்த கோவிந்தாபுரம் பகுதியில், கொத்தனார் வேலை பார்த்து வந்தார்.நேற்று மாலை வேலை முடித்து வீட்டிற்கு, தன் 'ஹோண்டா ஆக்டிவா' ஸ்கூட்டரில் சென்றார். சிங்கபெருமாள் கோவில் -- மருதேரி சாலையில் மெல்ரோசாபுரம் சந்திப்பில் வந்தபோது, 'டிராயாம்ப்' தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிக் கொண்டு பின்னால் வந்த 'எய்ச்சர் டூரிஸ்டர்' வாகனம், இவரது ஸ்கூட்டரில் மோதியது.இதில் அன்பு படுகாயமடைந்து, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மறைமலை நகர் போக்குவரத்து போலீசார், அன்பு உடலை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.சம்பவ இடத்திற்கு வந்த தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு, வேன் ஓட்டுநரான காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் அடுத்த பெருங்குழி பகுதியைச் ஆறுமுகம், 35, என்பவரிடம் விசாரித்து வருகின்றனர்.
23-Jun-2025