உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / செங்கை - காஞ்சிபுரம் சாலையில் பஸ் நிழற்குடை பணிகள் தாமதம்

செங்கை - காஞ்சிபுரம் சாலையில் பஸ் நிழற்குடை பணிகள் தாமதம்

செங்கல்பட்டு:செங்கல்பட்டு - காஞ்சிபுரம் சாலையில், பேருந்து பயணியர் நிழற்குடை அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென, பயணியர் கோரிக்கை விடுத்துஉள்ளனர்.செங்கல்பட்டு - காஞ்சிபுரம் சாலையில், அடிக்கடி போக்குவரத்து நெரிசல், விபத்துகள் நடப்பதால், இந்த சாலையை மேம்படுத்த வேண்டும் என, வாகன ஓட்டிகள் மற்றும் பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கை எழுந்தது.

பணி நிறைவு

இதையடுத்து, செங்கல்பட்டு - காஞ்சிபுரம் சாலையை மேம்படுத்த, 2018ம் ஆண்டு, நெடுஞ்சாலைத் துறைக்கு, 448 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.இதைத்தொடர்ந்து, செங்கல்பட்டிலிருந்து வாலாஜாபாத் அடுத்த வெண்குடி கிராமம் வரை, நான்கு வழிச்சாலையாக மேம்படுத்தும் பணிகள் துவங்கி, தற்போது நிறைவடைந்து உள்ளன.வெண்குடி முதல் காஞ்சிபுரம் வரை, 13 கி.மீ., துாரத்திற்கு, இருவழிச் சாலை அமைக்கப்பட்டு உள்ளது.தற்போது, சாலையில் இருபுறம் பேருந்து நிறுத்தங்கள் உள்ள பகுதிகளில், பயணியருக்கான நிழற்குடைகள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.இந்நிலையில், இப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

விபத்து அபாயம்

இதுகுறித்து, பேருந்து பயணியர் கூறியதாவது:செங்கல்பட்டு - காஞ்சிபுரம் சாலையில், பேருந்து பயணியர் நிழற்குடை இல்லாததால் வெயில், மழையில் பயணியர் தவித்து வருகின்றனர். சாலையில் பேருந்திற்காக காத்திருக்கும் போது, கனரக வாகனங்களால் விபத்து அபாயம் நிலவுகிறது. அடிக்கடி பயணியர் மீது வாகனங்கள் மோதி, காயமடைந்து வருகின்றனர். பயணியர் பாதுகாப்பை உறுதி செய்ய, நிழற்குடை பணிகளை விரைவாக முடித்து பயன்பாட்டிற்கு திறக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ