உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பொது பயணி தவறவிட்ட பணப்பை ஒப்படைத்த பஸ் ஊழியர்கள்

பொது பயணி தவறவிட்ட பணப்பை ஒப்படைத்த பஸ் ஊழியர்கள்

கிளாம்பாக்கம், கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில், பெண் பயணி தவறவிட்ட பணப் பையை கண்டெடுத்து, அந்த பயணியிடம் ஒப்படைத்த பேருந்து நடத்துநர் மற்றும் ஓட்டுநருக்கு, சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிகின்றன.வண்டலுார் அடுத்த கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில், வெளியூர் செல்வதற்காக வந்த பெண் பயணி ஒருவர், தன் பையை தவறவிட்டுள்ளார். அந்த பையில், 73,000 ரூபாய் இருந்துள்ளது.பையை எங்கே தவறவிட்டோம் எனத் தெரியாமல், அந்த பெண் கதறி அழுதபடியே, பேருந்து முனையத்தை சுற்றி வந்துள்ளார்.இந்நிலையில், அந்த பையைக் கண்டெடுத்த அரசு பேருந்து ஓட்டுநர் இளங்கோ, நடத்துநர் வரதராஜ பெருமாள் ஆகிய இருவரும், தங்கள் துறை சார்ந்த அதிகாரியிடம் பையை ஒப்படைத்து உள்ளனர்.அப்போது, பெண் பயணி அந்த வழியாக அழுது புலம்பியபடியே செல்வதைக் கண்டு, என்னவென்று விசாரிக்க, அவர் பையை தொலைத்தது பற்றி கூறியுள்ளார்.பின், அப்பை அந்த பெண்ணுக்குச் சொந்தமானது என்பதை உறுதி செய்த அவர்கள், பையை பெண்ணிடம் ஒப்படைத்தனர்.இந்த செய்தி நேற்று, சமூக வளைதளங்களில் வேகமாக பரவ, பையை கண்டெடுத்து ஒப்படைத்த ஓட்டுநர், நடத்துநருக்கு பாராட்டுகள் குவிகின்றன.இது குறித்து காவல் நிலையத்திற்கு புகார் எதுவும் வரவில்லை என, கிளாம்பாக்கம் போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ