மனநல மறுவாழ்வு மையங்கள் பதிவு செய்ய அழைப்பு
செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள, அனைத்து வகையான மனநல மறுவாழ்வு மையங்கள் தமிழ்நாடு மனநல ஆணையத்தில், பதிவு செய்ய வேண்டும் என, அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கலெக்டர் சினேகா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: செங்கல்பட்டு மாவட்டத்தில், மனநல மருத்துவமனைகள், போதை மீட்பு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையங்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான மறுவாழ்வு மையங்கள் உள்ளிட்ட மனநல நிறுவனங்ள் மற்றும் மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இத்தகைய மனநல மறுவாழ்வு மையங்கள் அனைத்து மனநல பராமரிப்பு சட்டம் 2017ன் படி உரிமம் பெற மாநில மனநல ஆணையத்திடம் பதிவு செய்ய வேண்டும். பதிவு பெறாமல் செயல்படும் மனநல மறுவாழ்வு மையங்கள், சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மனநல காப்பாக வளாத்தில் உள்ள, தமிழ்நாடு மாநில மனநல முதன்மை செயல் அலுவர், https;//tnhealth.tn.gov.in/tngovin/dme/dme.php என்ற இணையதளத்தில் ஒரு மாதத்திற்குள் பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.