விதை நெல் வினியோகம் விவசாயிகளுக்கு அழைப்பு
அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கம் வட்டாரத்திற்கு உட்பட்ட விவசாயிகள், சான்று பெற்ற நெல் விதைகளை வாங்கி பயன்பெற, வேளாண்மை விரிவாக்க மையம் அழைப்பு விடுத்துள்ளது.செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுபாக்கம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் கூறியதாவது:அச்சிறுபாக்கம் வேளாண்மை விரிவாக்க மையத்தில், சம்பா பருவத்திற்கான ' கோ51' நெல் ரகம், போதுமான இருப்பு உள்ளது. தற்போது பெய்து வரும் வடகிழக்கு பருவமழையைப் பயன்படுத்தி, விதைப்பு செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறது.விதை நெல் வாங்க தேவையான ஆவணங்களாக, ஆதார் அட்டை, சிட்டா, பட்டா, அடங்கல் உள்ளிட்ட சான்றுகளை பயன்படுத்தி பெற்றுக்கொள்ளலாம்.விவசாயம் சார்ந்த கூடுதல் தகவல்களுக்கு, அந்தந்த பகுதி உதவி வேளாண்மை அலுவலர்களை தொடர்பு கொண்டு, விவசாயிகள் பயன்பெறலாம்.
வட்டார உதவி வேளாண் அலுவலர் தொடர்பு எண்கள்
அச்சிறுபாக்கம் : 63831 83773பெரும்பேர்கண்டிகை : 81482 37098ஒரத்தி : 95511 06550பெரும்பாக்கம் : 88255 82855எல்.எண்டத்துார் : 95973 91613