மேலும் செய்திகள்
சாலையை கடக்க முயன்றவர் அரசு பஸ் மோதி பலி
07-Aug-2025
கூடுவாஞ்சேரி:கூடுவாஞ்சேரி அருகே, ஆம்னி பஸ் மோதியதில், இருசக்கர வாகனத்தில் வந்த கார் ஓட்டுநர், பலியானார். கடலுார் மாவட்டம், பண்ருட்டி பகுதியை சேர்ந்தவர் ராஜசேகர், 36: இவர் கூடுவாஞ்சேரி அடுத்த தைலாவரம் பகுதியில் தங்கி, கால் டாக்சி கார் ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார். நேற்று மதியம் தன் இருசக்கர வாகனத்தில், கூடுவாஞ்சேரி அடுத்த தைலாவரம் அருகே, ஜி.எஸ்.டி. சாலையை கடக்க முயன்றார். அப்போது கூடங்குளத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த ஆம்னி பஸ், இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் ராஜசேகர் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
07-Aug-2025