உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கூடுவாஞ்சேரியில் கட்டுப்பாட்டை இழந்து டெய்லர் கடைக்குள் நுழைந்த கார்

கூடுவாஞ்சேரியில் கட்டுப்பாட்டை இழந்து டெய்லர் கடைக்குள் நுழைந்த கார்

கூடுவாஞ்சேரி:நந்திவரம் - கூடுவாஞ்சேரி நகராட்சி, கூடுவாஞ்சேரி அடுத்துள்ள சீனிவாசபுரம் சிக்னலில் நேற்று காலை, செங்கல்பட்டில் இருந்து, தாம்பரம் நோக்கி கார் ஒன்று வந்தது. சிக்னல் அருகில் வரும் போது கட்டுப்பாட்டை இழந்த கார், அருகில் மூடியிருந்த டெய்லர் கடையின் இரும்பு 'ஷட்டர்' மீது மோதி நின்றது.இதில், காரின் முன்பக்கம், கதவுகள் கடுமையாக சேதமடைந்தன. லேசான காயமடைந்த கார் ஓட்டுநர், காரில் இருந்து வெளியே வர முடியாமல் தவித்தார். உடனே, அங்கிருந்தோர் அவரை மீட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும், கடையின் உரிமையாளர் விரைந்து வந்து, கடையை திறந்த முயன்றார். ஆனால், கடையின் இரும்பு 'ஷட்டர்' சேதமாகி, உள்ளே இருந்த கண்ணாடி பொருட்களும் உடைந்திருந்தது தெரிந்தது.இதைத்தொடர்ந்து, கடையில் உடைந்த பொருட்களுக்கு காரின் உரிமையாளர் இழப்பீடு வழங்குவதாக தெரிவித்ததை தொடர்ந்து, காவல் நிலையத்தில் புகார் எதுவும் கொடுக்காமல், இருவரும் சமரசமாக சென்றனர். இந்த விபத்து சம்பவம், அப்பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ