உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / எம்.ஜி.எம்., ஊழியர்கள் 4 பேர் மீது வழக்கு பதிவு

எம்.ஜி.எம்., ஊழியர்கள் 4 பேர் மீது வழக்கு பதிவு

கானத்துா:சென்னை கிழக்கு கடற்கரை சாலை கானத்துாரில் எம்.ஜி.எம்., என்ற பொழுதுபோக்கு பூங்கா உள்ளது. கடந்த 13ம் தேதி, அங்குள்ள படகு வடிவ ராட்டினத்தில் 15 பெண்கள் உட்பட 40க்கும் மேற்பட்டோர் ஏறினர்.ராட்டினத்தில் உள்ள ராட்சத கூடை போன்ற பகுதி, திடீரென கழன்று அதில் இருந்த இருவர் மீது விழுந்தது. அதிர்ஷ்டவசமாக இருவரும் லேசான காயங்களுடன் தப்பினர்.இந்த சம்பவத்தின் வீடியோ, சமூக வலைதளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து, கானத்துார் போலீசார் விசாரணை நடத்தி, பூங்கா மேலாளர் உள்ளிட்ட நான்கு ஊழியர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ