மேலும் செய்திகள்
குட்கா பொருட்கள் விற்ற இருவர் மீது வழக்கு பதிவு
28-Nov-2024
செங்கல்பட்டு:செங்கல்பட்டு பெரிய நத்தம் பகுதியில் உள்ள மளிகை கடையில், குட்கா, புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக, செங்கல்பட்டு நகர போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து, அந்த கடையில் போலீசார் நடத்திய சோதனையில், விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்த, 200 பாக்கெட் குட்கா பொருட்களை, போலீசார் பறிமுதல் செய்தனர்.கடையின் உரிமையாளர் ராமகிருஷ்ணன், 46, என்பவர் மீது வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
28-Nov-2024