உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / நெய்குப்பி பள்ளியில் நுாற்றாண்டு விழா

நெய்குப்பி பள்ளியில் நுாற்றாண்டு விழா

சதுரங்கப்பட்டினம்; சதுரங்கப்பட்டினம் அடுத்த நெய்குப்பி பகுதியில், கடந்த 1925ல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி துவங்கப்பட்டு, தற்போது நுாற்றாண்டை கடந்துள்ளது.இதையடுத்து, பள்ளி நிர்வாகம், முன்னாள் மாணவர்களை ஒருங்கிணைத்து, நேற்று முன்தினம் விழா கொண்டாடப்பட்டது. தலைமையாசிரியை நளினி தலைமை வகித்தார்.சிறப்பு விருந்தினராக, இந்திய கப்பற்படையின் கல்பாக்கம், ஐ.என்.எஸ்., பல்லவா செயல் அலுவலர் கணேஷ், நல்லுார் தியான பூமி பவுண்டேஷன் நிறுவனர் திருமூலர் ஆகியோர் பங்கேற்றனர்.நுாற்றாண்டு விழா சுடர் ஏற்றப்பட்டு, அவர்கள் வாழ்த்தினர். மாணவ - மாணவியர் சிலம்பம், நடனம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நிகழ்த்தினர்.முன்னாள் மாணவர்கள், அனுபவங்களை பகிர்ந்தனர். ஊராட்சித் தலைவர் அர்ச்சுணன், துணைத்தலைவர் கதிரவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை