உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / செங்கை ஜி.எஸ்.டி., சாலையில் வாகன நிறுத்தம் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் அலட்சியம்

செங்கை ஜி.எஸ்.டி., சாலையில் வாகன நிறுத்தம் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் அலட்சியம்

செங்கல்பட்டு:செங்கல்பட்டு - மதுராந்தகம் சாலை, நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ளன. இந்த சாலையில், செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை - ஒருங்கிணைந்த நீதிமன்றம் வரை, நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான இணைப்பு சாலையை ஆக்கிரமித்து, இருசக்கர வாகனம், கார் உள்ளிட்ட வாகனங்கள் நிறுத்தப்படுகிறது.இவ்வழியாக, அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை, சப்- கலெக்டர் அலுவலகம், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள, நீதிமன்றம் உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்களுக்கு, தினமும் ஆயிரக்கணக்கானவர்கள் வந்து செல்கின்றனர்.இதனால், பாதாசரிகள் சாலையின் மையப்பகுதியில், விபத்து ஆபத்துடன் செல்கின்றனர். இப்பகுதியில், அடிக்கடி சாலை விபத்துக்கள் நடந்து, நுாறுக்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.இணைப்பு சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம், சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியும் நடவடிக்கை எடுக்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இச்சாலையில், விபத்துக்கள் நடப்பதற்குள், சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என, வலியுறுத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை