/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / செங்கல்பட்டு: புகார் பெட்டி; இடைக்கழிநாடு பேரூராட்சியில் சாலையில் உலவும் கால்நடைகள்
செங்கல்பட்டு: புகார் பெட்டி; இடைக்கழிநாடு பேரூராட்சியில் சாலையில் உலவும் கால்நடைகள்
இடைக்கழிநாடு பேரூராட்சியில் சாலையில் உலவும் கால்நடைகள்
செய்யூர் அருகே இடைக்கழிநாடு பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில், 2,000க்கும் மேற்பட்ட கால்நடைகள் வளர்க்கப்படுகின்றன.கால்நடைகள் முறையாக பராமரிக்கப்படாததால், இரவு நேரத்தில் அவை சாலையில் உலா வருகொன்றன. அதனால், வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துக்கு உள்ளாகி பாதிக்கப்படுகின்றனர். மேலும், அவை அப்பகுதியில் உள்ள வயல்வெளிகளையும் நாசம் செய்கின்றன.ஆகையால், துறை சார்ந்த அதிகாரிகள், இடைக்கழிநாடு பேரூராட்சியில், கட்டுப்பாடற்று சாலையில் உலவும் கால்நடைகளை பிடித்து, அவற்றின் உரிமையாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.- வே.கணேசன், கடப்பாக்கம்.