உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / செங்கல்பட்டு: புகார்பெட்டி; வெடால் சாலையில் பள்ளம் தொடரும் விபத்து அபாயம்

செங்கல்பட்டு: புகார்பெட்டி; வெடால் சாலையில் பள்ளம் தொடரும் விபத்து அபாயம்

வெடால் சாலையில் பள்ளம் தொடரும் விபத்து அபாயம்

சித்தாமூர் அருகே சின்னகளக்காடி கிராமத்தில் இருந்து, வெடால் செல்லும் தார் சாலை உள்ளது. தினசரி ஏராளமான வாகனங்கள் கடந்து செல்கின்றன.பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.கிராமத்தில் இருந்து வயல்வெளிக்கு செல்லும் பகுதியில், இந்த சாலை நடுவே பள்ளம் ஏற்பட்டு உள்ளது. அதனால், இரவு நேரத்தில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், பள்ளத்தில் சிக்கி அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றனர்.ஆகையால், துறை சார்ந்த அதிகாரிகள், சாலை நடுவே ஏற்பட்டுள்ள பள்ளத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.- து.கணேசன், சித்தாமூர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !