/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / செங்கல்பட்டு: புகார் பெட்டி; மாமல்லை சாலையில் பொங்கும் பாதாள சாக்கடை கழிவுநீர்
செங்கல்பட்டு: புகார் பெட்டி; மாமல்லை சாலையில் பொங்கும் பாதாள சாக்கடை கழிவுநீர்
மாமல்லை சாலையில் பொங்கும் பாதாள சாக்கடை கழிவுநீர்
மாமல்லபுரத்தில் பாதாள சாக்கடை பயன்பாட்டில் உள்ளது. அதற்காக நிலத்தடியில் அமைக்கப்பட்டுள்ள குழாய்கள், குறுகியதாகவும், தரமின்றியும் உள்ளன.அதனால், குழாய்களில் அடிக்கடி அடைப்பு ஏற்படுகிறது. தரமற்ற குழாய்கள் உடைகின்றன. பெருகிவரும் கழிவுநீர் செல்ல இயலவில்லை. எனவே, பிரதான சாலைகள், தெருக்களில் உள்ள சாக்கடை திறப்புகள் வழியே, கழிவுநீர் வெளியேறி சாலையில் தேங்குகிறது.இதனால், சுகாதார சீர்கேடு, துர்நாற்றம் ஏற்படுகிறது. அப்பகுதியை கடக்கும் பொதுமக்கள், சுற்றுலா பயணியர் முகம் சுளித்து அருவருக்கின்றனர். பேரூராட்சி நிர்வாகம், பாதாள சாக்கடை சீர்கேடுகளை சரிசெய்ய வேண்டும்.-- ஜெ.முருகானந்தம், சென்னை.