உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / செங்கல்பட்டு பிணவறைக்கு தண்ணீர் வசதி இல்லை

செங்கல்பட்டு பிணவறைக்கு தண்ணீர் வசதி இல்லை

செங்கல்பட்டு:செங்கல்பட்டு அரசு மருத்துவமனை பிணவறைக்கு, தண்ணீர் வசதி இல்லாததால், உடல்களை பிரேத பரிசோதனை செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.செங்கல்பட்டு அரசு மருத்துவமனை வளாகத்தில், பிணவறை உள்ளது.இங்கு தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் சாலை விபத்தில் இறப்பவர்கள் மற்றும் கொலை, தற்கொலையால் இறப்பவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்படுகின்றன.தினமும், 10க்கும் மேற்பட்ட உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்படும் நிலையில், கடந்த சில நாட்களாக பிணவறைக்கு வரும் குழாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், தண்ணீர் இல்லாமல் உடல்களை பிரேத பரிசோதனை செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.தற்காலிகமாக குழாய்கள் வாயிலாக தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது.இதுமட்டுமின்றி, அங்கு பணிபுரிபவர்களுக்கும் தண்ணீர் இல்லாமல் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தும், பிணவறைக்கு வரும் குழாயில் அடைப்பை சரி செய்யாமல், பொதுப்பணித் துறையினர் அலட்சியமாக உள்ளனர்.உடல்களை பிரேத பரிசோதனை செய்ய வேண்டிய அவசியம் கருதி, தண்ணீர் வசதி ஏற்பாடு செய்ய வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !