உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு /  போக்சோ வழக்கில் கல்லுாரி மாணவர் கைது

 போக்சோ வழக்கில் கல்லுாரி மாணவர் கைது

மேல்மருவத்துார்-: மேல்மருவத்துாரில் போக்சோ வழக்கில், கல்லுாரி மாணவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஒரத்தி காவல் எல்லைக்குட்பட்ட அனந்தமங்கலம் கிராமத்தை சேர்ந்த 17 வயது கல்லுாரி மாணவர், அதே பகுதியைச் சேர்ந்த 15 வயது பள்ளி மாணவியை பாலியல் சீண்டல் செய்துள்ளார். இதுகுறித்து, பள்ளி மாணவியின் பெற்றோர், மேல்மரு வத்துார் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், நேற்று முன்தினம் புகார் அளித்தனர். பு காரின்படி வழக்கு பதிவு செய்து, கல்லுாரி மாணவரை கைது செய்து, செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, செங்கல்பட்டு சிறார் சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ