உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பால் பாக்கெட் கிடைக்காமல் கூவாஞ்சேரியில் பொது மக்கள் அவதி

பால் பாக்கெட் கிடைக்காமல் கூவாஞ்சேரியில் பொது மக்கள் அவதி

கூடுவாஞ்சேரி: நந்திவரம் கூடுவாஞ்சேரி, வண்டலூர், ஊரப்பாக்கம், காயரம்பேடு, பெருமாட்டு நல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் மளிகை, காய்கறி , பால் பொருட்கள் விற்பனை அதிக அளவில் நடைபெற்றது.நேற்று முன்தினம், இரவில் இருந்து சுற்றுவட்டார பகுதியில் உள்ள காய்கறி கடை, மளிகை கடைகளில் பொதுமக்கள் திரண்டு வந்து, வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி சென்றனர்.வழக்கத்தை விட, அதிகமாக பொருட்களை வாங்கி சென்றதால், அனைத்து கடைகளிலும் காய்கறிகள் விற்று தீர்ந்தன. காய்கறி விலையும் கூடுதலாக இருந்தது.பொருட்கள் ஒரு கிலோ ரூபாய் தக்காளி 100 வெங்காயம் 120உருளைக்கிழங்கு 80கத்தரிக்காய் 70கேரட் 100கொத்தமல்லி ஒரு கட்டு 20 புதினா ஒரு கட்டு 10பீன்ஸ் 130 என விற்பனை செய்யப்பட்டது.மேலும் பெருமாட்டு நல்லூர், காயரம்பேடு சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கடைகளில் காய்கறிகள், பால் பாக்கெட்டுகள் விற்று தீர்ந்தன. பால் பாக்கெட் கிடைக்காமல் பொதுமக்கள் கடைகடையாக, அலைந்து திரிந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி