மேலும் செய்திகள்
மறைமலை நகர் அருகே தீப்பற்றி எரிந்த சரக்கு வாகனம்
23-May-2025
மறைமலை நகர்:மறைமலை நகர் காவல் நிலையம் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை இல்லாததால், சாலையோரம் வெயிலில் காத்திருந்து பயணியர் அவதிப்படுகின்றனர்.மறைமலை நகர் -- கலிவந்தப்பட்டு மார்க்கத்தில் மாநகர பேருந்து 'எம் 118' இயக்கப்படுகிறது. சுற்றுப் பகுதிகளில் உள்ள கிராமங்களைச் சேர்ந்தோர், மறைமலை நகர் பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளில் வேலைக்குச் செல்ல, இந்த பேருந்தை பயன்படுத்தி வருகின்றனர். மறைமலை நகர் அண்ணா சாலையில், மறைமலை நகர் காவல் நிலைய எதிரில் பேருந்து நிறுத்தம் உள்ளது.இங்கு நிழற்குடை இல்லாததால் பயணியர் வெயிலிலும், மழையிலும் நீண்ட நேரம் நிற்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் பெண்கள், மாணவ -- மாணவியர், முதியோர் மிகவும் சிரமப்படுகின்றனர்.எனவே, இங்கு பேருந்து நிழற்குடை அமைக்க, நகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
23-May-2025