உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / புகார் பெட்டி :காயரம்பேடு சாலை சேதம் புனரமைக்க வேண்டுகோள்

புகார் பெட்டி :காயரம்பேடு சாலை சேதம் புனரமைக்க வேண்டுகோள்

காட்டாங்கொளத்துார் ஒன்றியம், காயரம்பேடு ஊராட்சியில், 187 தெருக்களில், 10,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.இங்கு, ஊராட்சி அலுவலகம் இயங்கிவரும் ஜவஹர்லால் நேரு தெரு சாலை, கடுமையாக சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது.சிறு மழை பெய்தாலும், சாலையில் உள்ள பள்ளங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால், ஊராட்சி அலுவலகத்திற்கு வரும் வாகன ஓட்டிகள், நடந்து வரும் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர்.எனவே, இந்த சாலையை புனரமைக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- கே.எல்லம்மாள்,காயரம்பேடு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி